
இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் சினேகன் தந்தை வருகைக்கு பிறகு கணேஷ் வெங்கட்ராமனின் மனைவி நடிகை நிஷா பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார். நிஷா பிக் பாஸ் வீட்டிற்கு வருவதற்கு முன்பு வீட்டில் உள்ள எல்லா பிரபலங்களும் பிக் பாஸ் கொடுத்த டாஸ்க் படி சிலை போல் நின்றுக் கொண்டிருந்தனர்.
அந்த சமயத்தில் நிஷா வீட்டிற்குள் வர கணேஷ் மட்டும் நிஷாவை கட்டித் தழுவி வரவேற்றார்.
நிஷா மற்றும் கணேஷ் அவர்கள் அன்பை பகிர்ந்துக் கொண்டு மகிழ்ந்தனர். அதைத்தொடர்ந்து, கணேஷ் வெங்கட்ராமனுக்காக, நிஷா சில சாப்பிடும் பொருட்கள் கொண்டுவந்து கொடுத்தார்.
பிறகு, கணேஷ் மற்றும் நிஷா ஒரு பாடலுக்கு நடனம் ஆடி வீட்டில் உள்ளவர்களை மகிழ்வித்தனர். பிறகு நிஷா வேண்டுகோளிற்காக ஆரவ் மற்றும் ஹரிஷ் நடனம் ஆடி நிஷாவை பிக் பாஸ் வீட்டை விட்டு அனுப்பிவைத்தனர்.