கண்களில் ஏற்படும் வீக்கம் 

259

பரம்பரை, வயதாகுதல், உப்பு அதிகமுள்ள உணவை சாப்பிடுதல் மற்றும் அலர்ஜி போன்ற காரணத்தினால் கண்களுக்கு கீழ் நீர் அதிகரித்து கண்களில் வீக்கம் ஏற்படுகிறது.

வீக்கமான கண்கள், சிறுநீரகக் கோளாறுகள் அல்லது கல்லீரல் நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்.

கண் வீக்கத்தோடு தூக்கமின்மை, வறண்ட வாய், கண்கள், வயிற்றுவலி, தலைச்சுற்றல் ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் அதை அலட்சியப்படுத்தக் கூடாது.

கண் வீக்கத்தை போக்க என்ன செய்ய வேண்டும்?
  • உடலில் அதிக உப்பு சேர்ந்தால், கண்ணில் நீரைத் தேக்கி வீக்கத்தை உண்டாக்கும். எனவே ஒரு நாளைக்கு 5 அல்லது 6 கிராம் அளவு உப்பை மட்டும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • குளிர்ச்சியான ஈரத்துணி அல்லது ஐஸ் கட்டிகளை ஒரு துணியில் கட்டி, கண்ணுக்கு கீழ் ஒத்தடம் கொடுத்தால் கண் வீக்கத்தைக் குறைக்கலாம்.
  • வெள்ளரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, கண்களை மூடிக்கொண்டு இமைகளின் மேல் வெள்ளரிக்காய் துண்டுகளை சில நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும்.
  • தேநீரில் உள்ள டேனின்ஸ் (Tannin’s) இயற்கையாகவே சுருங்கும் தன்மை கொண்டது. எனவே கண்ணின் மேல் குளிர்ச்சியான தேநீர் பைகளை சில நிமிடங்கள் வைத்தால், கண் வீக்கத்தை குறைக்கும்.
  • அலர்ஜிகளும் கண் வீக்கத்துக்கு முக்கிய காரணமாகும். எனவே அலர்ஜியை ஏற்படுத்தும் தூசு, பூஞ்சை ஆகிய பொருள்களைத் தவிர்ப்பது நல்லது.
குறிப்பு

தினமும் நிம்மதியான உறக்கம் தேவை. அதோடு தலையை சற்று உயரமாக வைத்துக் கொண்டு தூங்குவது நல்லது. ஏனெனில் அதனால் கண்களுக்கு கீழ் நீர் தேங்குவதை தடுக்கலாம்.

SHARE