கண்டிப்பாக அது இனிமேல் நடக்காது: நீங்காத நினைவுகளுடன் சங்கக்காரா

296

சமீபத்திய சறுக்கலுக்கு இலங்கை அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தின் மூலம் கண்டிப்பாக பதிலளிப்பர் என்று குமார் சங்கக்காரா கூறியுள்ளார்.

இலங்கை அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்காரா இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டிப் போட்டியில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் பிபிசி-யின் நிகழ்ச்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த சங்கக்காரா, எங்களிடம் பல திறமையான வீரர்கள் உள்ளனர். ஆனால் முதல் தரப் போட்டிகளில் சிறந்த கட்டமைப்பு என்பது அவசியம்.

அவர்களின் தரம், மனத்திறன், குணம் என அனைத்தையும் அடிக்கடி ஆராய்ந்து சர்வதேச தரத்திற்கு கொண்டு வர வேண்டும். இது இலங்கை கிரிக்கெட்டுக்கு முக்கியமான காலகட்டமாக இருக்கப் போகிறது.

கண்டிப்பாக முன்னாள் மற்றும் தற்போதைய வீரர்கள் மீண்டும் அணியை ஒரு புதிய நிலைக்கு எடுத்துச் செல்வார்கள் என்று நம்புகிறேன்.

மேலும், சர்வதேச போட்டிகளின் போது ஆடுகளத்தில் களமிறங்கி நீண்டநேரம் துடுப்பெடுத்தாடுவது என்பதற்கு நிகராக ஏதும் இருக்க முடியாது.

சர்வதேச போட்டிகளின் அந்த தருணத்தை நான் மிகவும் மிஸ் செய்கிறேன். அது இனி நடக்காது. ஆனால் வாழ்வோடு நாமும் ஒருகிணைந்து போக வேண்டியுள்ளதே என்று கூறியுள்ளார்.

625.117.560.350.160.300.053.800.210.160.70 (4)

SHARE