கண்டி, ரஜமாவத்தையில் உள்ள கந்தே சந்தி கெப்பிட்டியாவ பிரதேசத்தில் 30 அடி ஆழமான குகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கெப்பிட்டியாவ கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு நீர் விநியோக வசதிகளை வழங்குவதற்காக இங்கு அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் போது குகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த குகைக்குள் செல்லக்கூடிய இரண்டு பாதைகள் உள்ளன. ஒரு பாதையில் எதுவித சிரமுமின்றி ஆயிரம் அடி தூரம் வரை செல்ல முடியும்.
அதிககூடிய வெப்பம், மூச்சு விடுவதில் உள்ள சிரமம் போன்ற காரணமாக அதிக தூரம் செல்ல முடியாத நிலை உள்ளதாக குகைக்குள் சென்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த குகை தொடர்பில் ஆராய்ச்சிகளை நடத்த புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.