கண்டெடுக்கப்பட்ட அங்கிகள் மற்றும் யுத்த ஆயுதங்களால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சறுத்தல் என பலர் கருத்து வெளியிட்டாலும் அவற்றால் எந்த அச்சுறுத்தலும் இல்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணா சேன ஹெட்டியாராய்ச்சி தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அத்துடன், குறித்த ஆயுதங்கள் தொடர்பான விசாரணைகளை விசேட பொலிஸ் பிரிவினர் மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக கருணா சேன ஹெட்டியாராய்ச்சி குறிப்பிட்டார்.
இதன்மூலமாக மீண்டும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினர் தலைத்தூக்கப் போவதாக கருத்துகள் வெளிவந்தாலும், அதனுள் அரசியல் இலாபமே தென்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அவ்வாறு மீண்டும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்போ அல்லது வேறு அமைப்புகளோ தோன்றினாலும் அதற்கு முகங்கொடுக்கக் கூடிய சக்தி தேசிய பாதுகாப்பிடம் உள்ளது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணா சேன ஹெட்டியாராய்ச்சி தெரிவித்தார்.