கண்ணிவெடியில் கால் வைத்த ரஷ்ய தளபதிக்கு நேர்ந்த கதி

122

 

உக்ரைனில் ரஷ்ய தளபதி ஒருவர் கண்ணிவெடியில் கால் வைத்ததால் வெடிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

ரஷ்ய விமானப்படைகளில் ஒரு பிரிவின் தலைவரும் தளபதியுமான Arman Ospanov என்பவரே உயிரிழந்துள்ளார்.

உக்ரைனில் போரிடும் ரஷ்ய வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக உக்ரைன் சென்றுள்ள நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்தில் பலி
இவர் தவறுதலாக கண்ணிவெடியில் கால் வைத்ததால் உடல் சிதறி பரிதாபமாக பலியானார்.

இந்த தகவலை ரஷ்ய தரப்பும், உக்ரைன் தரப்பும் உறுதி செய்துள்ளன. உக்ரைன் போர் துவங்கியதிலிருந்து, ரஷ்ய வீரர்கள் மாத்திரமின்றி படை தளபதிகளும் உயிரிழந்துள்ளனர்.

மேலும் போர் தொடங்கியதிலிருந்து தற்போது வரை 365,170 ரஷ்ய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE