கண்ணீருடன் பேட்டியளித்த பிரித்தானிய பிரதமர்

211

பிரித்தானிய நாட்டின் பிரதமரான தெரசா மே தனக்கு குழந்தைகள் பிறக்காததை எண்ணி கண்ணீருடன் பேட்டியளித்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய பிரதமரான தெரசா மே ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றவர். இவருக்கு 25 வயது உள்ளபோது தந்தை உயிரிழந்துள்ளார்.

சில மாதங்களுக்கு பின்னர் இவரது தாயாரும் உயிரிழக்க நேரிட்டதும் தெரசா மேயின் கணவரான ஃபிலிப் மேயை திருமணம் செய்துக்கொண்டார்.

இருவருக்கும் திருமணம் ஆன நிலையிலும், தெரசா மேயின் உடல் நிலை காரணமாக இருவருக்கும் தற்போது வரை குழந்தை பிறக்கவில்லை.

இந்நிலையில், நேற்று முன் தினம் LBC ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தெரசா மே தனது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேசியுள்ளார்.

அப்போது, தனக்கு குழந்தை பிறக்காமல் போனதை பற்றி அவர் கண் கலங்கி பேசியுள்ளார்.

‘தாய்மை நிலையை அடையாமல் வாழ்வது ஒரு பெண்ணிற்கு மிகவும் வேதனையானது. அந்த வேதனையை நான் நன்றாகவே உணர்கிறேன்.

ஆனாலும், என்னைப் போல் இந்த சமுதாயத்தில் பல பெண்கள் இருப்பதால் வாழ்க்கையை எதிர்க்கொள்ள வேண்டிய துணிச்சலை வரவழைத்துக்கொண்டேன்.

என்னுடைய இளமை காலங்களில் என் மீது பெற்றோர்கள் அளவற்ற அன்பு வைத்திருந்தனர். பெற்றோரின் மறைவுக்கு பின்னர் எனது கணவர் தான் இதுவரை என்னை அன்பாக பார்த்து வருகிறார்.

இதுமட்டுமில்லாமல், கிறித்துவ மதக்கொள்கைகள் மீது அதிகளவில் நம்பிக்கை வைத்துள்ளதால் இந்நாட்டின் பிரதமராகவும் தன்னை நெறிப்படுத்திக்கொண்டதாக தெரசா மே உருக்கமுடன் பேட்டியளித்துள்ளார்.

SHARE