ஒருவருக்கு அழகான தோற்றத்தை கொடுப்பது கண்கள் மட்டுமே, வயதாகி விட்டது என்பதன் முதல் அறிகுறி கண்களில் தான் தெரியும்.
தூங்காமல் ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருந்தால் கண்கள் சோர்வாக இருப்பதுடன் கருவளையம் வந்துவிடும்.
இந்த மாதிரியான தோற்றத்தில் உங்களை நீங்களே கண்ணாடியில் பார்க்கும்போது மனச் சோர்வு வரும்.
ஆனால் அதற்காக தளராமல் உங்களுக்கான இந்த டிப்ஸை செய்து பாருங்கள்.

அவகேடோ மற்றும் தேன்
அவகேடோவின் சதைப் பகுதியை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் அரை டீ ஸ்பூன் தேன் கலந்து சேர்த்து அரைத்து பேஸ்ட் போல் செய்து, பின் அதை கண்களைச் சுற்றிலும் மெல்லிய லேயராக போட்டு. காய்ந்ததும் கழுவ வேண்டும். இதே போல் வாரம் ஒரு முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வெள்ளரி மற்றும் புதினா
வெள்ளரிச் சாறு மற்றும் புதினா சாறு இரண்டையும் சம அளவு கலந்து எடுத்து கொண்டு அதை கண்களைச் சுற்றிலும் தினமும் தடவி வந்தால் கருவளையம் மற்றும் கண் சுருக்கங்கள் காணாமல் போய்விடும்.

ஆலிவ் எண்ணெய் மற்றும் கேரட்
கேரட்டை அரைத்து அதனுடன் ஆலிவ் எண்ணெய் கலந்தது பேஸ்ட் போல செய்து பின் அதை, கண்களின் மேல் போட்டு 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இதனால் கண்கள் மிகவும் புத்துணர்வு மற்றும் ஈர்ப்புத்தன்மையை பெற்று சுருக்கங்கள் மறையும்.
பால்
காய்ச்சாத பாலில் பஞ்சை கொண்டு நனைத்து கண்களைச் சுற்றிலும் ஒத்தி எடுப்பதை போல செய்து, பின் காய்ந்ததும் கழுவ வேண்டும். தினமும் 2 முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயில் லினோலெயிக் என்ற அமிலம் இருப்பதால் அவை கண்களின் பாதிக்கப்பட்டுள்ள திசுக்களை நீக்கி இளமையை தருகிறது. எனவே தினமும் இரவு தூங்குவதற்கு முன் தேங்காய் எண்ணெயை கண்களைச் சுற்றிலும் தடவி வந்தால், கண் சுருக்கங்கள் மறையும்.
பப்பாளி
பப்பாளியை முகம் முழுவதும் தேய்க்கலாம். கண்களை சுற்றிலும் மெதுவாய் பப்பாளியின் சதைப் பகுதியை தடவி மசாஜ் செய்து 5 நிமிடத்தில் கழுவ வேண்டும். இதனால் கண் சுருக்கங்கள் நீங்கி முகப் பொலிவுடன் காணப்படும்.
கற்றாழை ஜெல்லி
கற்றாழையின் சதைப் பற்றை எடுத்து சிறிது பால் கலந்து கண்களைச் சுற்றிலும் தடவ வேண்டும். காய்ந்தப் பின் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால், சென்ஸிடிவான சருமத்தில் சுருக்கங்களை போக்கி, இளமையான தோற்றத்தை தருகிறது.