
பிரித்தானியா நாட்டில் பார்வையில்லாத காதல் ஜோடியை மதம் சம்மந்தமாக காரணம் காட்டி கால் டாக்சியில் ஏற்ற மறுத்த கார் ஓட்டுனரின் செயல் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
பிரித்தானியா நாட்டில் உள்ள Leicester நகரில் Charles Bloch (22) என்ற நபர் வசித்து வருகிறார். இவர் Jessica Graham (21) என்ற பெண்ணை காதலித்து வருகிறார்.
காதலர்கள் இருவருக்குமே பிறவியிலிருந்து கண்பார்வை கிடையாது. அதனால் அவர்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது துணைக்கு தாங்கள் வளர்க்கும் Carlo என்னும் நாய் குட்டியை அழைத்து செல்வது வழக்கமாகும்.
அதன்ப்படி Charles தன் காதலியுடன் வெளியில் செல்ல ஒரு தனியார் கால் டாக்சி நிறுவனத்திடமிருந்து ஒரு காரை வாடகைக்கு புக் செய்தார்.
அவர்கள் சொன்ன இடத்துக்கு கார் வந்தது. அதை Abandi Jamal Kassim (43) என்னும் இஸ்லாமிய ஓட்டுனர் ஓட்டி வந்தார்.
Charles மற்றும் Jessica அந்த காரில் தங்கள் நாயுடன் ஏற முயன்ற போது அதை ஓட்டுனர் Kassim தடுத்துள்ளார். நாயை எல்லாம் காரில் ஏற்றி செல்வது எங்கள் மத வழக்கத்தின் படி தவறாகும் என அதற்கு விளக்கமும் கூறியுள்ளார்.
இந்த விடயங்களையெல்லாம் அருகில் இருந்த ஒரு நபர் வீடியோவாக எடுத்து இணையத்தில் விட்டுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த தனியார் வாகன உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள் இந்த வீடியோவை பார்த்து ஓட்டுனர் Kassim மீது வழக்கு தொடர்ந்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டKassimமிடம் பேசிய நீதிபதி, பார்வையற்றவர்களை இப்படி துன்புறுத்தியது தவறு மற்றும் மதம் என்ற பெயரால் பாகுபாடு பார்ப்பதும் மிக தவறாகும்.
இதனால் அவருக்கு £590 பணம் அபராதம் விதித்த நீதிபதி, தேவைப்பட்டால் Kassim ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யக்கூட நீதிமன்றம் தயங்காது என எச்சரித்துள்ளார்.