நடிகை அனுஷ்கா ஷெட்டி சமீப காலமாக படங்கள் நடிப்பதை தவிர்த்து வருகிகிறார். அவர் உடல் எடை கூடியதால் தான் இந்த முடிவெடுத்தார் என்றும், எடையை குறைக்க சிகிச்சை மேற்கொண்டு வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது அவர் ஒரு படத்தினை ஒப்புக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் அவர் கண் பார்வை இல்லாத, சரியாக காது கேட்காத பெண்னாக நடிக்கிறாராம்.
பல பட வாய்ப்புகளை நிராகரித்த அவர் இந்த கதாபாத்திரம் சவாலாக இருக்கும் என்பதால் ஒப்புக்கொண்டாராம். அதற்காக தற்போது பார்வையற்றவர்களை சந்தித்து அவர்கள் மனநிலை எப்படி இருக்கும் என பயிற்சி எடுத்து வருகிறார் அனுஷ்கா.