கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் ஐஸ்வர்யா

104
நீலகிரியில் அடுத்த படத்தை தொடங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் மூலம் படங்களை வெளியிட்டு வருகிறார். கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் உருவாகும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் 2 படங்களை அடுத்து அடுத்து வழங்க இருக்கிறார். அஸ்வின், அபய் தியோல், ஐஸ்வர்யா ராஜேஷ், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘இது வேதாளம் சொல்லும் கதை’. ரதிந்திரன் இயக்கிய இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டதால், சரியான வெளியீட்டுக்காக படம் காத்திருக்கிறது.
இந்நிலையில், தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை ரதிந்தரன் தொடங்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு நீலகிரியில் தொடங்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தை முழுக்க ஹாரர் திரில்லர் பாணியில் உருவாக்கியுள்ளார்கள்.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் அடுத்த படம்
சில நாட்களுக்கு முன்பு ஸ்டோன் பென்ச் நிறுவனம் சார்பில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2-வது படமாக ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தின் பணிகளை தொடங்கியுள்ளனர்.
SHARE