கதிர்காமத்தில் சொந்த மகள் மீது தந்தையொருவர் துப்பாக்கிச் சூடு…

248

shot 8945r

கதிர்காமத்தில் சொந்த மகள் மீது தந்தையொருவர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

நேற்று முன்தினம் இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தந்தையினால் மகள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பிலான வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தது.

குறித்த தந்தை தனது மகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பு நேற்றைய தினம் ஹம்பாந்தோட்டை நீதிமன்றில் அறிவிக்கப்படவிருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குறித்த தந்தை தனது மகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த யுவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த யுவதி 25 வயதுடையவர் எனவும், துப்பாக்கிச் சூடு நடத்திய தந்தை 54 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தப்பிச் சென்ற நபரை தேடும் பணிகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த யுவதி வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்

SHARE