தீவிரவாதத்திற்கு நிதியளிப்பதை கத்தார் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.
தீவிரவாதத்துக்கு துணை புரிவதாக கத்தார் நாடு மீடு எழுந்துள்ள குற்றச்சாட்டால் சவுதி, எகிப்து, பக்ரைன், அமீரகம் போன்ற நாடுகளிலிருந்து கத்தார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கத்தார் நாட்டின் செயல் குறித்து பேசியுள்ள டிரம்ப், தீவிரவாதத்துக்கு நிதியளிப்பதை அந்நாடு நிறுத்தி கொள்ள வேண்டும்.
தீவிரவாதத்திற்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும், மனிதர்களே மனிதர்களை கொல்லும் பயங்கரவாதத்திற்கு எதிராக அனைவரும் ஒன்று கூட அழைப்பு விடுப்பதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.
வளைகுடா நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டதன் காரணமாக கத்தாருக்கு ஆதரவாக துருக்கி தனது ராணுவப் படைகளையும், உணவு, மருந்து உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்றித் தர முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.