கத்திக்குத்துக்கு இலக்காகி பாதுகாப்பு அதிகாரி பலி

289
குருநாகல்- யட்டிவெஹரவத்த பிரதேசத்தில் கத்திக்குத்துக்கு இலக்காகி பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று இரவு 10 மணியளவில் இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குருநாகல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கத்திக்குத்துக்கு இலக்கான நபர், படுகாயமடைந்த நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், பாதுகாப்பு அதிகாரிக்கும் மற்றுமொரு நபருக்கும் இடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் சந்தேக நபர் இந்த அதிகாரி மீது கத்தியால் குத்திவிட்டு அந்தப் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Dead

SHARE