ஈழத்தின் வரலாற்றுப் புகழ்வாய்ந்த யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழாக் காலத்தில் நாளாந்தம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நேற்றையதினம் ஒரு லட்சத்துக்கு அண்மித்த பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர். இவர்களுள் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியப் பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
அதுதவிர வெளிநாடுகளில் வசிக்கும் புலம்பெயர்ந்த மக்களும் அதிகளவில் கலந்துகொண்டுள்ளனர்.
அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு இந்தியாவின் தமிழ் நாட்டிலிருந்து அதிகளவான மக்கள் வந்துபோவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
25 நாட்களைக் கொண்ட நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா கடந்த 16ஆம் நாள் கொடியேற்றத் திருவிழாவுடன் ஆரம்பமானது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் எட்டாம் நாள் தேர்த் திருவிழாவும் ஒன்பதாம் நாள் தீர்த்தத்திருவிழாவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.