கந்தளாய் சீனி உற்பத்தி நிலையத்தின் பணிகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை

251

கந்தளாய் சீனி உற்பத்தி நிலையத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கான வேலைத்திட்டங்களை அரசு மேற்கொள்ளவுள்ளது.

இதன்படி கந்தளாய் சீனி உற்பத்தி நிலையத்தின் கட்டுமானப் பணிகளை ஓகஸ்ட் மாதத்திற்கு முதல் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக காணி அமைச்சின் செயலாளர் ஐ.எஸ்.கே.மஹானாம தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த கந்தளாய் சீனி உற்பத்தி நிறுவனத்தை மீண்டும் இயக்குவதற்காக அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கமைய வெளிநாட்டு நிறுவனம் ஒன்றிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை குறித்த சீனி உற்பத்தி நிறுவனத்தின் முழு பங்கில் 51 வீதமானவை அரசாங்கத்திடமும், 49 வீதமான பங்குகள் குறித்த நிறுவனத்திற்கு வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

 images

SHARE