கனடாவின் கறுப்பு தினம்! – போதைப் பொருள் எதிர்ப்பாளர்கள்

140

கஞ்சா போதைப்பொருளை சட்டபூர்வமாக்கிய தினத்தை கனடாவின் போதைப் பொருட்பாவனைக்கு எதிரான சமூக செயற்பாட்டாளர்கள் கறுப்பு தினமாகக் கருதியுள்ளனர்.

கனடிய நாடு முழுவதும் நேற்றைய (புதன்கிழமை) தினம் மீள் உருவாக்கத்திற்கு உகந்த கஞ்சா போதைப் பொருட்களை விற்பனை, கொள்வனவு செய்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதை அந்நாட்டு அரசாங்கம் சட்டபூர்வமாக்கியுள்ளது.

இதனையிட்டு, போதைப் பொருட்பாவனைக்கு எதிரான சமூக செயற்பாட்டாளர்கள் குறித்த சட்டபூர்வ தினத்தை கனடிய மக்களின் கறுப்பு தினமாகக் கருதி அனுஷ்டித்துள்ளனர்.

போதைப் பொருட்பாவனையின் ஊடாக கனடிய மக்களின் சுகாதாரம், ஆரோக்கியம் பாதிக்கப்படும் அதுமட்டுன்றி பாவனையில் ஈடுபடாதவர்களுக்கும் சுவாச நோய்கள் ஏற்படலாமென என அச்சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நேற்று, பல பொது இடங்களில் கையேடுகள் விநியோகித்தல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகளை மேற்கொள்ளல் என சமூக செயற்பாட்டாளர்கள் கறுப்பு தினத்தை மக்களுக்கு விளக்க முயன்றுள்ளனர்.

SHARE