கனடாவின் சில பகுதிகளில் வழமைக்கு மாறான வெப்பநிலை பதிவு

122

 

கனடாவின் சில இடங்களில் வழமைக்கு மாறான அடிப்படையில் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

அல்பேர்ட்டா, பிரிட்டிஸ் கொலம்பியா, யுகோன் போன்ற பகுதிகளில் இவ்வாறு வழமையை விடவும் கூடுதலான வெப்பநிலை பதிவாகியுள்ளது.

கனடாவின் சுற்றாடல் திணைக்களம் இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது.

வழமையாக இந்த மாதங்களில் நிலவக்கூடிய வெப்பநிலையை விடவும் அதிகளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது.

சில இடங்களில் பல ஆண்டுகளின் பின்னர் பெருமளவில் வெப்பநிலை பதிவாகியுள்ளதுகுறிப்பாக நேற்றைய தினம் பெனஃப், பிவர்லொட்ஜ் மற்றும் எட்மோன்டன் ஆகிய இடங்களில் அதிகளவில் வெப்பநிலை பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

SHARE