பிரிட்டிஷ் கொலம்பியா, ஒன்ராறியோ, மனிரோபா மற்றும் பிரின்ஸ் எட்வேட் ஐலன்ட் ஆகிய மாகாணங்களில் வலுவான வளர்ச்சி காணப்பட்டுள்ளதாகவும் தொடரந்து இரண்டாவது வருடமாக பொருளாதார வளர்ச்சி காணப்படும் அல்பேர்ட்டா மற்றும் சஸ்கற்சுவான் மாகாணங்களுடன் ஈடுகட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவின் புள்ளிவிபரவியல் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் எட்டு மாகாணங்கள் மற்றும் இரண்டு நிலப்பகுதிகள் அவர்களது மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த ஆண்டு விரிவடைந்துள்ளதாக காட்டுகின்றதாக தெரிவித்துள்ளது.
தொடர்ந்து இரண்டாவது வருடமாக பிரிட்டிஷ் கொலம்பியாவின் பொருளாதார வளர்ச்சி 3.7சதவிகிதமாகவும் 2015ல் 3.1சதவிகிதமாகவும் இருந்துள்ளது. எண்ணெய் றியல் எஸ்டேட், எரிவாயு போன்றன வளர்ச்சிக்கு காரணமாக இருந்துள்ளது. இதே சமயம் பொறியியல் மற்றும் உற்பத்தி சரிவடைந்துள்ளதெனவும் கூறப்படுகின்றது.
ஒன்ராறியோ இரண்டாவது இடத்தில் உள்ளது. சேவை துறை மாகாணத்தின் வலுவிற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
முன்னய வருடத்தை விட மனிரோபா 2.4சதவிகிதம் விரிவடைந்துள்ளது.
பிரின்ஸ் எட்வேட் ஐலன்ட் 2.4சதவிகதம் விரிவடைந்துள்ளது.
நியு பவுன்லாந் மற்றும் லப்ரடோர் 1.9சதவிகிதமும் கியுபெக் 1.7சதவிகதமாகவும் விரிவடைந்துள்ளன.
நியு பிரவுன்ஸ்விக் 2015ல் 2.1சதவிகிதமும் கடந்த வருடம் 1.4சதவிகித்தாலும் விரிவடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
நோவ ஸ்கோசியா0.9சதவிகிதம் அல்பேர்ட்ட 2016ல் 3.8சதவிகிதத்தால் சரிவடைந்தும் உள்ளதென தெரியவந்துள்ளது.