கனடாவிலிருந்து நாடு கடத்துவதற்கு எதிராக இலங்கையர் மேன்முறையீடு

246

கனடாவில் இருந்து நாடு கடத்துவதற்கு எதிராக இலங்கையர் ஒருவர் அந்நாட்டு உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளார்.

டெக்ஸி ஓட்டுனரான நஸ்ரின் அஹமட் மொஹமட் நிலாம் என்ற இலங்கையரே இவ்வாறு மேன்முறையீடு செய்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது குறித்த இலங்கையர் 2008 ஆம் ஆண்டு கனடா சென்றுள்ளார். எனினும், குறித்த இலங்கையர், 2010, 2011 ஆம் ஆண்டில் இரு தடவைகள் இலங்கைக்கு வந்து சென்றுள்ளார்.

இரண்டு தடவைகள் இலங்கை சென்று பாதுகாப்பாக நாடு திரும்பியமையால், அவருக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்ற நிலைப்பாட்டை கனேடிய குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தீர்மானித்து, அவரை நாடு கடத்த தீர்மானித்துள்ளனர்.

இந்த நிலையிலேயே தன்னை நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையர் மேன்முறையீடு செய்துள்ளார்.

SHARE