கடந்த செப்டம்பர் மாதத்தில் கனடாவில் அதிக எண்ணிக்கையான வீடுகள் விற்கப்பட்டுள்ளதாகவும் ஒகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் விற்பனை உயர்ந்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பல வகையான சேவைகள் மூலம் செப்ரம்பர் மாதத்தில் விற்பனை கடந்த ஒகஸ்ட் மாதத்தை விட 2.1 சத வீதத்தால் அதிகரித்துள்ளது என கூறப்படுகின்றது.
வன்கூவர் பெரும்பாகம் மற்றும் வன்கூவர் ஐலன்ட், ரொறொன்ரோ பெரும்பாகம், சென் தோமஸ். ஒன்ராறியோ, மற்றும் பார்ரி, ஒன்ராறியோ ஆகிய இடங்களில் ஏற்பட்ட ஏற்றமே காரணமென அறியப்படுகின்றது.
செப்ரம்பரில் விற்கப்பட்ட வீடுகளின் தேசிய சராசரி விலை டொலர்கள் 487,000 ஆகும். ஓரு வருடத்திற்கு முன்னையதை விட 2.8சதவிகிதம் அதிகம் எனவும் கூறப்படுகின்றது.
வன்கூவர் பெரும்பாகம் மற்றும் ரொறொன்ரோ பெரும் பாகம் தவிர்ந்த இடங்களின் சராசரி விலை டொலர்கள் 374,500ற்கும் குறைவாக காணப்படுகின்றது.