கனடாவில் அதிவேகமாக காரை ஓட்டி சிறுவனின் உயிரை பறித்தாக பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

358

 

கனடாவில் அதிவேகமாக காரை ஓட்டி சிறுவனின் உயிரை பறித்தாக பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பாட்ரிக் அவுலெட் என்ற பொலிஸ் அதிகாரி தனது வாகனத்தை வேகமாக இயக்கியதாக கூறப்படுகிறது.இந்நிலையில் அந்த வாகனம் மற்றொரு காரில் மோதியதில் தனது தந்தையுடன் காரில் சென்றிருந்த 5 வயது சிறுவன் ஒருவன் படுகாயமடைந்தான்.பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டஅந்த சிறுவன் சிகிச்சை பலனளிக்காமல் சில நாட்களின் பின்னர் உயிரிழந்தான்.

இந்நிலையில் 50 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்க வேண்டிய பிரதேசத்தில் 120 கிலோ மீற்றர் வேகத்தில் பொலிஸ் வாகனம் பயணித்தமையே விபத்து ஏற்பட்டதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வெள்ளிக்கிழமையன்று கியூபெக் லொங்குவில் நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது பொலிஸ் அதிகாரியின் சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களை ஏற்றுக் கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சட்ட நடவடிக்கைகள் நிலுவையில் இருப்பதன் காரணமாக பொலிஸ் சேவையிலிருந்து பாட்ரிக் அவுலெட் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE