கனடாவில் இந்தப் பழத்தை சாப்பிட 5 பேருக்கு நேர்ந்த சோகம்!

114

 

கனடாவில் கிர்னி அல்லது முலாம் பழம் உட்கொண்ட ஐந்து பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வகை பழகத்தில் பரவிய ஒரு வகை சல்மோனெல்லா பக்றீரியாவினால்பலர் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.

கனடாவின் ஆறு மாகாணங்களில் இந்த வகை பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மெலிசிட்டா (Malichita) மற்றும்(Rudy) ரூடி ஆகிய பண்டக்குறிகளைக் கொண்ட பொதிகளில் விற்பனை செய்யப்பட்ட பழ வகைகளே இவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகத்தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நோய்த் தாக்கத்தினால் 129 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என கனடிய பொதுச் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

கியூபெக் மாகாணத்தில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.பாதிக்கப்பட்டவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் 65 வயதையும் கடந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

 

SHARE