கனடாவில் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த நபர் மரணமடைந்துள்ளார்.
இது குறித்த தகவலை பெடரல் அரசு ஏஜன்ஸியான Correctional Service of Canada வெளியிட்டுள்ளது.
கோலின் விக்டர் ஸ்டீவர்ட் (36) என்பவர் கடந்த 2009-ஆம் ஆண்டு செப்டம்பர் வான்கவரில் ரஜிந்தர் சூமல் என்பவரை சுட்டு கொன்றார்.
இவ்வழக்கு சம்மந்தமாக விக்டர் மற்றும் கெவின் ஜேம்ஸ் என்பவரை பொலிசார் கைது செய்தனர்.
அவர்கள் மீதான வழக்கு விசாரணை 2016-ல் முடிந்த நிலையில் அப்போதிலிருந்து சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் விக்டர் தற்போது சிறையிலேயே உயிரிழந்துள்ளார்.
அவர் இறப்புக்கான காரணம் வெளியிடப்படவில்லை.