கனடாவில் சட்டவிரோதமாக நுழைந்த நபர் கைது

138

கனடாவில் சந்தேகம் அடைய கூடிய வகையில் சட்டவிரோதமாக உள்ளே நுழைந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஒன்றாறிவோவில் உள்ள Stewart Boulevard-ல் நபர் ஒருவர், முழுவதும் தண்ணீரில் நனைந்த நிலையில் சென்று கொண்டிருந்தார்.

அவரை அழைத்து பொலிசார் விசாரித்த போது சட்டவிரோதமாக St. Lawrence ஆற்றின் மூலம் படகில் கனடாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தது தெரியவந்தது.

குறித்த நபரை பொலிசார் சோதனை செய்ததில் அவரிடம் அமெரிக்க பாஸ்போர்ட் இருந்தது.

இதையடுத்து அவரை குடியேற்ற சட்டத்தின் கீழ் கைது செய்த பொலிசார், சுங்க முகவர்களிடம் ஒப்படைத்தனர்.

SHARE