கனடாவில் தமிழ் குடும்பஸ்தரை கைது செய்த பொலிஸார்! வெளியான பரபரப்பு காரணம்

159

 

கனடாவில் பெண்ணொருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் தமிழ் குடும்பஸ்தரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் 43 வயதான நபரொருவரே ரொறன்ரோ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கடந்த 30ஆம் திகதி ரொறன்ரோவில் உள்ள Don Mills ரயில் நிலையத்திற்கு அருகில் பெண்ணொருவரை கொடூரமாக தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபருக்கு எதிராக 4 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இருப்பினும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

SHARE