கனடாவில் தொழிலாளி ஒருவரின் 30 ஆண்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி

96

 

கனடாவின் ரொறன்ரோ பகுதியில் ஓய்வு பெற்ற தொழிலாளி ஒருவருக்கு லொத்தர் சீட்டிலுப்பில் ஜாக்பொட் பரிசு கிடைத்துள்ளது.

கட்டுமான பணியாளரான ரபால் மேசா வால்டெஸ் என்பவருக்கு இவ்வாறு அதிர்ஷ்டம் கிட்டியுள்ளது.

லோட்டோ 6/49 கிளாசிக் லொத்தர் சீட்டிலுப்பில் ஐந்து மில்லியன் டாலர்களை பரிசாக வென்றுள்ளார்.கடந்த 30 ஆண்டுகளாக லொத்தர் சீட்டிலுப்பில் பங்கேற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

வெற்றி இலக்கங்களை பரீட்சித்தபோது அதிர்ச்சி அடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.தமது வெற்றியிலகங்கள் சரியானவை என வேறு ஒருவரின் உதவியுடன் அதனை சரி பார்த்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் தனது மனைவியிடம் லொத்தர் சீட்டு வெற்றி குறித்து குறிப்பிட்டபோது அவர் அதனை நம்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ரொறன்ரோவில் வீடு ஒன்ற கொள்வனவு செய்ய திட்டமிட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

SHARE