கனடாவில் லொத்தர் சீட்டில் மோசடி செய்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சுரண்டக்கூடிய லொத்தர் சீட்டுக்களில் மோசடி செய்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் இந்த மோசடி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
லொத்தர் சீட்டின் சுரண்டும் பகுதியில் திருத்தங்களைச் செய்து மீண்டும் அவற்றை சந்தையில் விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிக்கரிங் பகுதியைச் சேர்ந்த 44 வயதான ஸ்டீபன் மைக்கல் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் ஒன்றாரியோ பிராந்திய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.