கனடாவில் வயது முதிர்ந்தவர்களுக்கான பிரமாண்ட இசைப்போட்டி

150

கனடாவில் முதன் முறையாக 55 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கான பிரமாண்ட இசைப்போட்டி நடைபெற உள்ளது.

கனடாவில் செயல்பட்டு வரும் விலா கருணா முதியோர் இல்லத்தின் சார்பில் சந்தியாராகம் 2016 என்ற தலைப்பில் பிமாண்ட இசைப்போட்டியினை நடத்த உள்ளனர்.

கோல்டன் சூப்பர் சிங்கர் 2016 என்ற இந்த இசைப்போட்டியில் 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வாய்ப்பு அளிக்க உள்ளனர்.

நியூ ஜாஸ்மின் மண்டபத்தில் வைத்து எதிர்வரும் 18 ஆம் திகதி இந்த இசைப்போட்டியானது நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த விழாவில் சிற்றுண்டிகளும் மதிய உணவும் வழங்கப்படும்.

மட்டுமின்றி இளம் கலைஞர்களின் ஆடல் பாடல் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

இந்த விழாவிற்கு சிறப்பு கட்டணமாக 30 டொலர் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

SHARE