கனடாவில் வயது முதிர்ந்தவர்கள் மத்தியில் அதிகளவான விவாகரத்துக்கள் பதிவுவாவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான விவாகரத்துக்கள் காரணமாக ஆண்களை விடவும் பெண்கள் அதிகம் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. சராசரியாக கனடாவில் விவாகரத்து பெற்றுக் கொள்வோரின் வயதெல்லை அதிகரித்துச் செல்வதாக தொடர்ந்தும் அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவில் முதியவர்கள் மத்தியில் அதிகரிக்கும் விவாகரத்து | Grey Divorce Canada High குறிப்பாக வயது கூடிய நிலையில் திருமண பந்தத்தில் இணைந்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் இது விவாகரத்துக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கனடாவில் விவாகரத்து பெற்றுக் கொள்ளும் சராசரி வயது 48 என தெரிவிக்கப்படுகிறது. கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த மூன்று தசாப்த காலங்களாகவே 50 அல்லது அதனையும் விட அதிக வயதுடைய தம்பதியினர் மத்தியில் விவாகரத்துக்கள் பதிவாகும் சந்தர்ப்பம் அதிகரித்துச் செல்லும் போக்கு பதிவாகியுள்ளது.

114

 

கனேடிய மாகாணமொன்றில், விலைவாசி உயர்வு காரணமாக செலவுகளை சமாளிக்க முடியாததால், வயதானவர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்பும் நிலை உருவாகியுள்ளதைக் குறித்த ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

கனடாவில் நோவா ஸ்கோஷியா மாகாணத்தில் வாழும் ஜேனட் ப்ரஷ் (77), எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்று தெரியவில்லை, ஆனால், அது நன்றாக இல்லை என்பது மட்டும் தெரிகிறது என்கிறார்.

வாடகை வீட்டில் வசிக்கும் ஜேனட்டுக்கு ஒரே வருவாய்தான். ஏற்ற இறக்கம் இல்லாத அந்த வருவாயில் பாதியை வீட்டு வாடகைக்காக பயன்படுத்துவதாகத் தெரிவிக்கிறார் அவர்.

லீஸ் விதிகள் காரணமாக, தான் முந்தைய வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாகக் கூறும் ஜேனட், இப்போது தான் குடியிருக்கும் வீட்டுக்கு, முந்தைய வீட்டைவிட மாதம் 250 டொலர்கள் கூடுதலாக செலுத்தவேண்டியுள்ளதாக தெரிவிக்கிறார்.

இந்த வயதில், வீடில்லாமல் தெருக்களில் வாழும் நிலைமை ஏற்படுமானால், அது பயங்கரம் என்று கூறும் ஜேனட், எனக்கு அந்த எண்ணமே திகிலை ஏற்படுத்துகிறது என்கிறார்.

ஆக, வீட்டுக்கு வாடகை கொடுத்தாகவேண்டும், விலைவாசியோ அதிகரித்துக்கொண்டே போகிறது. அதை சமாளிக்க என்ன செய்வது?

வேறென்ன வழி, ஏதாவது வேலைக்குப் போகவேண்டியதுதான் என்கிறார் ஜேனட். ஆக, பகுதி நேர வேலைக்குச் செல்ல திட்டமிட்டு வரும் அவர், இந்த வயதில் உடலை வருத்தி கடினமான வேலைகள் செய்யமுடியாது. ஆகவே, தன் அறிவைப் பயன்படுத்தி செய்யும் வேலை எதையாவது தேடவேண்டியதுதான் என்கிறார்.

SHARE