கனடாவில் வீடு தீப்பிடித்து எரிந்ததில் தாய்-குழந்தைகள் என 5 பேர் பலி

185

கனடாவின் ஒண்டாரியோ நகரில் உள்ள வீடு ஒன்றில் தீப்பிடித்து எரிந்த விபத்தில், தாய்-குழந்தைகள் என 5 பேர் உடல் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனடா நாட்டின் ஒண்டாரியோ நகரில் உள்ள வீடு ஒன்றில், நேற்றைய தினம் திடீரென தீப்பற்றியுள்ளது. வீடு முழுவதும் தீ மளமளவென பரவியதால் உள்ளே இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் சிக்கியதாக தெரிகிறது.

இதனால் தாயும், நான்கு குழந்தைகளும் தீயில் உடல் கருகி பரிதாபமாக பலியாகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன் பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர்.

இந்த கோர விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தெரியவில்லை. இந்நிலையில், இச்சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE