கனடாவை உலுக்கிய செவிலியரின் கொடூர செயல்!

224

625-500-560-350-160-300-053-800-748-160-70

ஐந்து பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் என மொத்தம் எட்டு பேரை பெண் செவிலியர் ஒருவர் விஷம் கொடுத்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்தவர் Elizabeth Wettlaufer (49). இவர் 2007 – 2014 காலகட்டத்தில் 75 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளான ஐந்து பெண்கள் மற்றும் மூன்று ஆண்களை விஷம் வைத்து கொலை செய்துள்ளார்.

பின்னார் 2014 கடைசியில் தன் செவிலியர் வேலையை ராஜினாமா செய்துள்ளார். அவர் அப்போது செய்துள்ள கொலை சம்பவம் தற்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த விடயம் பொலிசாருக்கு தற்போது தெரிய வந்ததையொட்டி Elizabethஐ அவர்கள் கைது செய்துள்ளனர்.

இது பற்றி ஒரு உயர் பொலிஸ் அதிகாரி கூறுகையில், இப்படி வயதான நோயாளிகளை ஒரு செவிலியரே கொலை செய்தது எங்களுக்கே அதிர்ச்சியாக இருக்கிறது. மேலும், அந்த செவிலியர் மருந்துகளை பராமரிக்கும் துறையை அந்த மருத்துவமனையில் கவனித்து வந்துள்ளார் என கூறியுள்ளார்.

Elizabeth வீட்டின் அருகாமையில் வசிப்பவர்கள் கூறுகையில், Elizabeth மிகவும் அமைதியாக இருப்பவர். எல்லோரிடமும் சகஜமாக பேசக்கூடியவர். அவர் இப்படிப்பட்ட கொடூர காரியத்தை செய்துள்ளார் என நினைக்கும் போது எங்களுக்கு பேரதிர்ச்சியாக இருக்கிறது என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கொலைக்கான காரணம் குறித்தும் மேலும் இந்த கொலை வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என பொலிசார் Elizabeth திடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஒரு செவிலியரின் இந்த கொடூர செயல் கனடிய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SHARE