கனடிய ஆசிரியருக்கு கொஸ்ராறிக்காவில் நினைவஞ்சலி

158

ரொறொன்ரோ கணித ஆசிரியர் ஒருவர் கடந்த வாரம் கொஸ்ரா றிக்கோவில் கொடூரமாக குத்தி கொலை செய்யபபட்டார். இவரின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக துக்கம் அனுட்டித்தவர்கள் கொஸ்ரா றிக்கோ கடற்கரையில் சனிக்கிழமை சூரிய அஸ்தமனத்தின் போது வரிசையாக நின்று கனடிய தேசிய கொடியை அசைத்தவண்ணமும் வெப்பமண்டல பூக்களை வீசி அஞ்சலி மரியாதை செய்தனர்.

இதே சூரிய அஸ்தமனத்தை படம் எடுக்க முயன்ற போது தான் புருஸ் மக்கலும் கொள்ளையடிக்கப்பட்டு கொலையும் செய்யப்பட்டார் என கொஸ்ர றிக்கா பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த வாரம் ரொறொன்ரோ மாவட்ட கல்வி சபை மக்கலும் மத்திய அமெரிக்க நாட்டில் இறந்து விட்டார் என உறுதிப்படுத்தியது. மார்ச் 5ல் மக்கலும் கொடூரமான முறையில் குத்தி கொலை செய்யப்பட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவித்தன.

இந்த நினைவு நிகழ்வு ஒரு தன்னிச்சையான அனைவரையும் ஈர்த்துள்ள ஒரு நிகழ்வாக அமைந்தது. நினைவு அஞ்சலியில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் மரியாதையை செலுத்தும் நோக்கத்துடன் கமராக்களை பிடித்து கொண்டு நின்றனர்.

புறுஸ் எங்கள் பிரியமான கரிபியன் அஸ்தமனத்தை புகைப்படம் எடுக்க முயன்ற சமயம் கொடூரமான முறையில் அவரது உயிர் பறிக்கப்பட்டது என சனிக்கிழமை நிகழ்வு குறித்து அறிவிக்கப்பட்ட ஆன்லைன் அழைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்ற திருட்டு சம்பவத்தில் ஒரு சந்தேக நபரை கொஸ்ர றிக்கா பொலிசார் கைது செய்துள்ளனர் ஆனால் ஆசிரியரின் கொலைக்கும் கைதானவருக்கும் தொடர்பு இருக்குமா என்பது தெளிவாகவில்லை.

SHARE