சிவகார்த்திகேயன் பல போட்டிகளுக்கிடையில் தனி தனக்கென இடத்தை பிடித்துவிட்டார். வெகு சீக்கிரத்திலேயே அவருக்கும் ஒரு தனி மார்க்கெட் உருவாகிவிட்டது. அவருக்கும் பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகிவிட்டது.
அடுத்தடுத்து படங்கள் ஹிட் கொடுத்து வருகிறார். அவர் தற்போது கனா படத்தின் மூலம் தயாரிப்பாளராகிவிட்டார். பெண்கள் கிரிக்கெட் விளையாடுவதை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை அவரின் நண்பர் அருண் ராஜா காமராஜ் இயக்கியுள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தின் ஹீரோ போல. சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதில் சிவகார்த்திகேயன் மகள் பாடிய வாயாடி பெத்த புள்ள பாடல் ரசிகர்களை மிகவும் கவர்ந்துவிட்டது.
இந்நிலையில் படம் நேற்று வெளியாகிவிட்டது. படத்தை சிவகார்த்திகேயன் சென்னை வெற்றி சினிமாஸில் ரசிகர்களுடன் முதல் நாள் முதல் காட்சி பார்த்துள்ளார்.
SK anna @Siva_Kartikeyan at #Kanna Fdfs at @VettriTheatres ??? pic.twitter.com/gW6RtJDlO7
— Sai RamaKrishnan (@Everydaycinema7) December 21, 2018