கனேடிய தபால் தொழிற்சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

132
கனேடிய தபால் ஊழியர்கள் சங்கத்தின் கோரிக்கைகளை அரசாங்கம் முழுமையாக ஏற்றுக்கொள்ளாவிடின், பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படும் என தபால் தொழிற்சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கனேடிய தபால் சேவைகளை மேம்படுத்தும் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்ற அந்நாட்டு அரசாங்கம் ஒப்புக்கொள்ள தவறுமிடத்து, அடுத்த நிமிடமே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக தபால் சங்கம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளது.

கனடாவின் தெரிவுசெய்யப்பட்ட நகரங்ளான விக்டோரியா, எட்மொன்டன், ஹலிஃபொக்ஸ், வின்ட்சன், ஒன்டாரியோ ஆகிய நான்கு இடத்தில் பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக தொழிற்சங்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தபால் சேவைக்கான தொழில் பாதுகாப்பு, மேலதிக நேர வேலையை வலியுறுத்துவதை ஒழித்தல், சுகாதார மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தல் போன்ற அடிப்படைக் கோரிக்கைகளை தபால் அலுவலகர்கள் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE