கனடா நாட்டில் புகலிடம் பெற்றுள்ள இருவர் தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பெயரை சூட்டியுள்ளனர்.
கனடாவின் பிரதமர் சிரியா அகதிகளுக்கு புகலிடம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதற்கான பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், சிரியாவை சேர்ந்த Afraa மற்றும் Moe Bilal என்ற தம்பதி கனடாவில் குடியேறியுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறித்த பெண்ணிற்கு ஆண் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது.
புகலிடம் கோரி வந்த சிரியா மக்களை அன்புடன் அரவணைத்து புகலிடம் வழங்கியுள்ள பிரதமரை கெளரப்படுத்தும் முகமாக தங்களுடைய குழந்தைக்கு பிரதமரின் பெயரை சூட்ட முடிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து குழந்தைக்கு Justin-Trudeau Adam Bilal என்ற பெயரை சூட்டியுள்ளனர்.