கப்பம் பெற்ற சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

179

ஹொரணை பகுதியில்  பொலிஸ் அதிகாரிகள் என தம்மை அடையாளப்படுத்தி தொலைபேசியூடாக வர்த்தகர்களை மிரட்டி கப்பம் பெற்ற சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து  ஒரு கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன், சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட  விசாரணைகளுக்கு அமைய அவர்கள் 35 வயதுடைய ஹொரணை பகுதியை சேர்ந்த கணிஷ்க கயான் மோதிலால் எனப்படுபவர் எனவும் 50 வயதுடைய புலத்சிங்கள பகுதியை சேர்ந்த  பந்துல எனப்படுபவர்கள் என தெரிய வந்துள்ளது.

மேலும், அவர்கள் பொலிஸாரல் இன்று ஹொரணை நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதுடன், சந்தேக நபர்கள்  மேற்படி நடவடிக்கையில் ஈடுபட்டமை தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE