கமர்ஷியல் ஹிட் பட இயக்குனருடன் இணைகிறாரா சிம்பு- இயக்குனரின் பதில்

121

கமர்ஷியல் படங்கள் இயக்குவதிலும் ஒரு தனி பாணியை உருவாக்கி வெற்றிநடை போட்டு வருபவர் ஹரி. இவரது இயக்கத்தில் அடுத்து விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சாமி ஸ்கொயர் என்ற படம் வெளியாக இருக்கிறது.

இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஹரியிடம், சிம்புவுடன் அடுத்து படம் இணைவீர்களா என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர், கண்டிப்பாக நல்ல கதை இருந்தால் இணைவோம். கோவில் படத்தின் படப்பிடிப்பிற்கு எல்லாம் அவர் சரியாக வந்துவிடுவார் எந்த பிரச்சனையும் இல்லை.

வருங்காலத்தில் சிம்புவுக்கான கதை எழுதினால் கண்டிப்பாக அவரை இயக்குவேன், எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று பேசியுள்ளார்.

SHARE