பிக்பாஸில் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்கள் போல கெட்டப் போட்டு நாள் முழுவதும் நடிக்க வேண்டும் என கூறப்பட்டது.
அதில் முகேன் நடிகர் விஜய் கெட்டப் போட்டார். இன்று அவர் அதே கெட்டப்பில் கமலை பார்த்து ஒரு கேள்வி கேட்டார். “நீங்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் வருவதென்றால் (கமல்ஹாசனாக இல்லாமல்) எந்த போட்டியாளராக வருவீர்கள்?” என கேட்டார்.
இந்த கேள்வியை எதிர்பார்க்காத கமல், சற்று நேரம் யோசித்துவிட்டு “தர்ஷன்” என பதில் அளித்தார். “தெனாலி படத்திற்கும் முன்னாள் அவர் தெனாலியாக வாழ்ந்தவர். அதில் இருந்து மீண்டு வந்தவர்களின் பேன் நான்” என கூறி கண்கலங்கினார் கமல்.
இலங்கை தமிழர்கள் பட்ட கஷ்டத்தை நினைத்து தான் கமல் கண்கலங்கினார்.