கமலின் அடுத்த படத்தில் ஓவியாவா?… ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

236

பிக்பாஸ் நிகழ்ச்சியால் ஓவியாவின் புகழ் தாறுமாறாக உயர்ந்து விட்டது. அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

இப்போது அவருக்கு இருக்கும் புகழை வைத்து தயாரிப்பாளர்கள் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர். ஹாலிவுட பட வாய்ப்பு கூட கதவை தட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தாலும் எங்கு சென்றாலும் ரசிகர்கள் சூழ்ந்து கொள்கின்றனர். அவர் ரசிகர்களின் அன்பு மழையில் திக்குமுக்காடி வருகிறார். கேரளாவில் உள்ள தனது வீட்டில் தற்போது அவர் ஓய்வு எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கமல் தனது அடுத்த படத்தில் ஓவியாவை நடிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த படத்தில் ஓவியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது ஓவியாவின் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.

SHARE