
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள அனைவரும் வைத்திருக்கும் சுருக்கு பையில் என்ன தான் வைத்திருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சியில் முதன் முறையாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் “பிக்பாஸ் தமிழ்” நிகழ்ச்சி கடந்த 25ம் திகதி ஆரம்பமானது.
இதில், நமீதா, ஓவியா, ஜல்லிக்கட்டு புகழ் ஜூலியானா, கஞ்சா கருப்பு, சக்தி, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட 15 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
100 நாட்களுக்கு தொடரவுள்ள இந்த ரியாலிட்டி ஷோவில் ஆரம்பமான முதல் இரு நாட்களில் பலத்த சர்ச்சைகள் எழுந்துள்ளன.
போட்டியாளர்களுக்கு இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.