கமலை பார்க்கும்போது கவுதமிக்கு வருத்தமாம்…

260

ஓடியாடி வேலை செய்த கமல் ஒரே இடத்தில் இருப்பது வேதனையாக இருக்கிறது என நடிகை கவுதமி தெரிவித்திருக்கிறார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.

நீண்ட இடைவெளிக்குப் பின் ‘பாபநாசம்’ படத்தில் நடித்த கவுதமிக்கு அப்படம் நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்தது. இதனால் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்த அவர் முடிவு செய்திருக்கிறார். மோகன்லாலுடன் இணைந்து கவுதமி நடித்திருக்கும் ‘நமது’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் ஆகஸ்ட் 5ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் கமலின் உடல்நலம் குறித்து கவுதமி கூறும்போது, கமல் தற்போது குணமாகிக் கொண்டு வருகிறார். ஓடி ஆடி வேலை செய்தவர் இப்போது ஒரே இடத்தில் இருப்பது அவருக்கு வேதனையாக இருக்கிறது. கபாலி படத்தை பார்த்து கமல் விமர்சனம் எழுதியதாக சமூக வலைதளங்களில் பரவிய செய்தி முற்றிலும் தவறானது.

காலில் அடிபட்டு படுத்திருக்கிற கமல் எப்படி ‘கபாலி படம்’ பார்க்க முடியும் என்று கூறினார். மேலும் தனது மகளுக்கு கலைத்துறை மீது அதிகமான விருப்பம் இருப்பதாகவும், இருந்தாலும் அவர் எந்த துறையில் கால்பதிக்க நினைக்கிறாரோ அந்த துறையில் ஈடுபடுத்தப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

kamal-gowdhami

SHARE