கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யக் கட்சியிலிருந்து விலகியுள்ளார் வழக்கறிஞர் ராஜசேகர்.

168

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யக் கட்சியிலிருந்து விலகியுள்ளார் வழக்கறிஞர் ராஜசேகர். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கிய போது முக்கிய பிரமுகர்கள் பலரும் கட்சியின் உயர்மட்டக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

இதில் நடிகை ஸ்ரீபிரியா, நடிகர் நாசரின் மனைவி கமீலா, வழக்கறிஞர் ராஜசேகர் உட்பட 16 பேர் இருந்தனர். ராஜசேகர் மூலமாக முன்னாள் காவல் அதிகாரி மவுரியா மற்றும் ஸ்டார் ஜெராக்ஸ் சௌரிராஜன் உள்ளிட்ட பலரும் கட்சியில் இணைந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக வழக்கறிஞர் ராஜசேகர்  கட்சியிலிருந்து விலகியுள்ளார். அவர் கூறுகையில், கடந்த ஆறு மாதங்களாக கட்சி உருவாக பாடுபட்டேன், அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை, கட்சியில் மரியாதையும் இல்லை. இதனால் என்னுடைய வழக்கறிஞர் தொழிலையும் சரிவர பார்க்க முடியாமல் போனதால் கட்சியிலிருந்து விலகுகிறேன் என தெரிவித்துள்ளார்.

SHARE