கமல்ஹாசன் எடுத்த முடிவால் கவலையடைந்த அவரது இரு மகள்கள்

146

நடிகர் கமல்ஹாசனின் அரசியல் வருகை குறித்து தமிழகத்தில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்ற நிலையில், தனது மகள்கள் இருவரும் தனது அரசியல் வருகை குறித்து கவலைப்பட்டதாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்து செயல்பட்டு வரும் கமல்ஹாசன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி மற்றும் திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறது.

இந்நிலையில், அவர் ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், எனது அரசியல் வருகை குறித்து என இரு மகள்களான ஸ்ருதியும், அக்ஷராவும் கவலை கொண்டனர். ஆனால் இதுபோன்ற நம்பிக்கையின்மை பொதுவாய காணப்படும் ஒன்று. எனவே இதுகுறித்து கவலைகொள்ள வேண்டாம் என அவர்களிடம் நான் தெரிவித்துவிட்டேன்.

மேலும், அவர்கள் இருவரது தொழிலில் நான் தலையிட்டதில்லை. அவர்களது வாழ்க்கை முடிவை அவர்களே எடுத்துக்கொள்ளட்டும். ஏனெனில் நான் 18 வயதில் எனது வாழ்க்கையில் முடிவுகளை எடுக்க ஆரம்பித்தேன்.

</p><p>அப்படித்தான் எனது பெற்றோர் என்னை வளர்த்தார்கள். அதுபோன்று அவர்களையும் வளர்த்துள்ளேன் என கூறியுள்ளார்.

SHARE