
பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர். இவர் தற்போது தமிழில் தனுஷுக்கு ஜோடியாக ‘அசுரன்’ படத்தில் நடித்துள்ளார். தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி 4வது முறையாக இணைந்திருக்கும் அசுரன் படம் அக்டோபர் 4ம் தேதி வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்படத்தில் தன்னுடைய நடிப்பு மூலம் ரசிகர்களை கவர்ந்த மஞ்சுவாரியர், தற்போது நடிகர் கமல்ஹாசனை கவர்ந்திருக்கிறார். மஞ்சுவாரியரின் நடிப்பை பாராட்டியிருக்கிறார் கமல். அவருடன் மஞ்சுவாரியர் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். வேல்ராஜ் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். பசுபதி, பிரகாஷ் ராஜ், டிஜே, கென், ஆடுகள் நரேன், பவன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.