பிரபல வர்த்தக நாமங்களின் பேரில் தயாரிக்கப்பட்ட போலி தயாரிப்புகள் அடங்கிய சுமார் 60 மெற்றிக் தொன் அழகுசாதனப் பொருட்களை கம்போடிய அதிகாரிகள் நேற்று செவ்வாய்க்கிழமை அழித்தனர்.
கடந்த மே மாதம் மேற்கொள்ளப்பட்ட முற்றுகைகளின்போது, சுமார் 68 தொன் போலி அழகுசாதனப் பொருட்களை தாம் கைப்பற்றியதாக கம்போடிய அதிகாரிகள் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது