சுவிட்சர்லாந்து நாட்டில் கயிறு கட்டி மலையேறியபோது நிகழ்ந்த எதிர்பாராத விபத்தில் பெண் உள்பட 4 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸ் மற்றும் இத்தாலி எல்லையில் அமைந்துள்ள Piz Bernina என்ற மலைப்பகுதியில் தான் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த புதன்கிழமை காலை 7 மணியளவில் 32 வயதான பெண் ஒருவர் மலையேறும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார்.
கயிறு மூலம் சுமார் 600 மீற்றர் உயரத்திற்கு சென்றபோது திடீரென கை நழுவி கீழே விழுந்துள்ளார்.
இவ்விபத்தில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பொலிசார் நடத்திய விசாரணையில் அப்பெண் ஜேர்மன் நாட்டை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தை தொடர்ந்து நேற்று காலை நேரத்தில் மூன்று பேர் இதே மலைப்பகுதியில் கயிறு கட்டி மலையில் ஏறியுள்ளனர்.
ஒரே கயிற்றில் மூன்று பேரும் தொங்கியவாறு ஏறியதாக கூறப்படுகிறது.
சுமார் 300 மீற்றர் உயரத்திற்கு சென்றபோது கயிறு அறுந்து மூன்று பேரும் கீழே விழுந்துள்ளனர்.
இக்காட்சியை கண்ட சுற்றுலா பயணிகள் மீட்புக் குழுவினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினர் மூன்று பேரையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர்.
நபர்கள் விழுந்த இடத்திற்கு மேல் பாறைகள் உடைந்து விழும் அபாயம் இருந்ததால் மீட்பு பணி தாமதமாக நடைபெற்றுள்ளது.
சில நிமிடங்களுக்கு பின்னர் உயிரற்ற சடலமாக மூவரும் கண்டுபிடிக்கப்பட்டு ஹெலிகொப்டரில் கொண்டு செல்லப்பட்டனர்.
இரண்டு தினங்களில் நான்கு பேர் அடுத்தடுத்து உயிரிழந்தது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.