காலி மாவட்டம் – கரந்தெனிய பிரதேசசபையின் பிரதித் தவிசாளர் டொனல்ட் சம்பத் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் ஊரகஸ்மங் சந்திப்பகுதியில் நேற்றிரவு 10.15 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கரந்தெனிய பிரதேசசபைக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற 48 வயதுடைய டொனல்ட் சம்பத் என்பவரே இதில் கொல்லப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.