கருக்கலைப்பு செய்த போலி மருத்துவர்

247

தமிழ்நாட்டில் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்த போலி மருத்துவர் உட்பட இருவரை பொலிசார் கைது செய்துள்ள நிலையில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவரை பொலிசார் தேடி வருகிறார்கள்.

தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரை சேர்ந்தவர் சலீம் (65), இவர் அந்த பகுதியில் வாழைப்பழ வியாபாரம் செய்து வருகிறார்.

இவருக்கு ஷாகீரா என்ற மனைவியும் ஒன்பது பிள்ளைகளும் உள்ளனர்.

இந்நிலையில் சலீம் தான் வசிக்கும் பகுதியில் உள்ள அவர் உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.

உறவினர் வெளியில் செல்லும் நேரம் பார்த்து வீட்டில், தனியாக இருந்த அவரது 14 வயதான மகளை சலீம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அங்குள்ள ஜெயபால் என்னும் மருத்துவரிடம் தங்கள் மகளை அழைத்து சென்றுள்ளனர்.

ஜெயபால், சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சையளித்து வந்த போதும் வயிற்றுவலி குறையவில்லை.

பின்னர், சிறுமிக்கு ஸ்கேன் எடுத்து பார்த்த மருத்துவர், சிறுமி 6 மாதம் கர்ப்பமாக உள்ளதாக கூறியதோடு அவசர அவசரமாக கருக்கலைப்பும் செய்துள்ளார்.

பின்னர் இதுகுறித்து சிறுமியின் தந்தை பொலிசிடம் புகார் அளிக்க விசாரணையில் ஜெயபால் போலி மருத்துவர் என தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து அரசு விதிகளை மீறி சிறுமிக்கு கருக்கலைப்பு செய்த ஜெயபாலையும், அவருக்கு உதவி புரிந்த ஜெயலட்சுமி என்ற பெண்ணையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

சிறுமியை பலாத்காரம் செய்து விட்டு தலைமறைவாக இருக்கும் சலீமை பொலிசார் தேடி வருகிறார்கள்.

SHARE