தளபதி விஜய் எப்போதும் கருணாநிதி மீது மிகுந்த அன்பு கொண்டவர். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் இளம் நடிகர்களில் கருணாநிதி அவர்களுக்கும் விஜய்யை தான் மிகவும் பிடிக்கும்.
இந்நிலையில் கருணாநிதி அவர்கள் கடந்த சில மாதங்களாக உடல் நிலை முடியாமல் இருந்து வந்தார், தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவர, ரஜினி, சூர்யா, விவேக் என பல நடிகர்கள் பார்த்து நலம் விசாரித்து வந்தனர்.
தற்போது சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு நடிகர் விஜய் வந்து, திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து நலம் விசாரித்துள்ளார், இதை அறிந்த ரசிகர்கள் கூட்டம் அங்கு குவிய தொடங்கியுள்ளது.